Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விபத்தில் சிக்கிய வேன்கள்…. ஐயப்ப பக்தர்கள் உள்பட 15 பேர் காயம்…. கோர விபத்து…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அறிந்த சக ஊழியர்கள் பணி முடிந்து நிறுவன வேனில் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அங்கு அந்த ஊழியர் சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் சக ஊழியர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியது.

அப்போது சபரிமலை நோக்கி ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளான வேன் மீது மோதியது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |