கடலூர் மாவட்டத்தில் உள்ள நத்தப்பட்டை பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு சகுந்தலா சாலையில் நடந்து சென்ற போது லாரி மோதி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான ஏழுமலை என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஏழுமலைக்கு 6000 ரூபாய் அபராதமும், 1 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
Categories