ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள வெங்கடகிருஷ்ணாபுரம் பகுதியை லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி தனது ஸ்கூட்டரில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் அரியலூர் உழவர் சந்தை அருகே சென்று கொண்டிருந்த போது வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிக்கும் அய்யப்பன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமியின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் லட்சுமியின் ஸ்கூட்டர் சேதமடைந்துள்ளது.
இதனை அடுத்து சேதமடைந்த ஸ்கூட்டரை சரி செய்து தருமாறு லட்சுமி கேட்டதற்கு அய்யப்பன் அதனை ஏற்றுக் கொண்டார். ஆனால் ஸ்கூட்டரை சரி செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து லட்சுமி கேட்ட போது அய்யப்பன் தனது உறவினரான காமராஜ் என்பவருடன் இணைந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து லட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அய்யப்பன் மற்றும் காமராஜ் ஆகிய 2 பேரையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.