Categories
மாநில செய்திகள்

விபத்தில் பலியான குழந்தை…. கண்கலங்க வைக்கும் பெற்றோர் செய்த செயல்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில் பழனிச்சாமி மற்றும் லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவியா மற்றும் தனுஜா என்ற இரு மகள்களும், சண்முகநாதன் என்ற ஒரு மகனும் இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது மகள் தனுஜாவிற்கு கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் குழந்தையை தூக்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது செல்லும் வழியில் வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

அதன்பிறகு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிசாமி வீடு அருகே குழந்தைக்கு ஒரு அடி உயர சிலை எழுப்பி கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர். இதையடுத்து மூன்று வருடங்களுக்கு முன்பு சிறுமி தனுஜாவின் சிலை எடுத்து கோவில் ஒன்றை கட்டி உள்ளனர். அந்தக் கோவிலுக்கு ஆண்டுதோறும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து சித்திரை மாதம் பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கும் விழா நடத்தி வருகிறார்கள். அதன்படி இந்த ஆண்டும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருவிழா நடத்தியுள்ளனர். விபத்தில் உயிரிழந்த மகளுக்கு பெற்றோர் கோவில் கட்டி ஆண்டுதோறும் திருவிழா நடத்தி வருவது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |