சீனாவில் உள்ள குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 123 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஈஸ்டர்ன் நிறுவனத்தின் விமானம் குவாங்ஸி அருகே அமைந்துள்ள மலை பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 123 பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விமானம் கீழே தலைகீழாக சுழன்று வரும் காட்சியும் விமானம் விழுந்த இடத்தில் காட்டு தீ ஏற்பட்டு கடுமையான புகை எழுந்ததும் அனைவரையும் பதைபதைக்க வைத்தது. இந்த காட்சிகள் அனைத்தும் உள்ளூர் சுரங்க நிறுவனத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
Final seconds of #MU5735 pic.twitter.com/gCoMX1iMDL
— ChinaAviationReview (@ChinaAvReview) March 21, 2022