Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான டிராக்டர்….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான இளையராஜா, பிரபாகரன் ஆகியோருடன் டிராக்டரில் வைக்கோல் போர் ஏற்றி சென்றுள்ளார். இந்த டிராக்டரை முருகானந்தம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மருதூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வன், இளையராஜா ஆகியோரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிராக்டர் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |