ஒடிசா மாநிலத்தில் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சரின் வாகனம் விபத்திற்குள்ளானது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பொடாசுலி பகுதி வழியாக மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி அவரது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டருடன் மோதி அவர் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்புறம் சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து காயமடைந்த மத்திய அமைச்சர் பிரதாப்பை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையின் விசாரணை நடத்தி வருகின்றனர்.