Categories
உலக செய்திகள்

விபத்துக்குள்ளான விமானம்…‌ 2 பயணிகளின் நிலை என்ன…? தேடுதல் பணி தீவிரம்…!!!!!

பிரித்தானியாவில் இருந்து வடக்கு பிரான்சில் உள்ள Le Touquet நோக்கி புறப்பட்ட The Piper PA-28 ரக விமானம் பிரித்தானிய கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது .

நேற்று சனிக்கிழமை பிரித்தானியாவில் இருந்து இரண்டு நபர்களை ஏற்றிக்கொண்டு வடக்கு பிரான்சில் உள்ள Le Touquet நோக்கி பறந்த The Piper PA-28 ரக விமானம் ஆங்கில கால்வாயில் மோதி விழுந்துள்ளது.இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானம் மற்றும் அதில் பயணம் செய்தவர்களை  மீட்கும் பணியில் பிரான்ஸ் நாட்டின் விமானங்கள் மற்றும் படகுகளின்  உதவிகளுடன் பிரித்தானிய கடற் பாதுகாப்பு குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழலில்  நேற்று இரவு 8 மணி நிலவரப்படி விமானி  மற்றும் இரண்டு பயணிகள் குறித்த எந்த ஒரு தடையும் கிடைக்காததால், தேடுதல் பணி மேலும் தீவிரப் படுத்தப் பட்டிருக்கிறது. இதுபற்றிய பிரான்ஸ் அவசரகால சேவை அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், விபத்து குறித்த எந்த ஒரு சரியான காரணமும்  இதுவரை கண்டறியப்படவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்த சிறிய ரக Piper PA-28 விமானம் பொதுவாக லைஃப் ஜாக்கெட்டுகள் மற்றும் அவசர காலங்களில் லைஃப் தெப்பங்கள்(rafts) போன்றவை கொண்டிருக்கும். மேலும் இவை பயிற்சி விமானங்களாகவும், விமான டாக்ஸிகளாகவும் அல்லது தனிப்பட்ட போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |