Categories
சினிமா தமிழ் சினிமா

விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய பிரபல நடிகர்…. வலைவீசி தேடும் போலீசார்….!!!!

படிக்காதவன், மோகினி, சிவா, அரண்மனை, கோவில் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் கணேஷ்கர். பிரபல தமிழ் காமெடி நடிகரான கணேஷ்கர் சாலையில் உள்ள தடுப்பில் காரை மோதி விட்டு தப்பி சென்றதாக எழுந்த புகாரில் காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டினம்பாக்கம் லூப் சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் அவரது ஹோண்டா ஜேஸ் காரை மோதி விபத்து ஏற்படுத்தியதாகவும் இதனால் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் கணேஷ்கரின் காரில் மோதி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கணேஷ்கர் வீட்டிற்கு வரவில்லை என்று ஆர்த்தி புகார் அளித்த நிலையில் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |