Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விபத்து ஏற்படும் அபாயம்…. “அவற்றை” தண்டவாளத்தில் வைக்க கூடாது…. பொதுமக்களை எச்சரித்த போலீசார்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் ரயில் நிலையத்திலிருந்து விருதாச்சலம் மார்க்கமாக செல்லும் தண்டவாளத்தில் ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் யாரோ சிறுவத்தூர் ரயில் நிலையம் அருகே ஈரப்பதத்துடன் உள்ள களிமண்ணை கட்டியாக உருட்டி தண்டவாளத்தில் வைத்துள்ளனர். இதனால் டிராலி வழுக்கிய படி நீண்ட தூரம் இழுத்து சென்று விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் தலைமையிலான போலீசார் தண்டவாளத்தை ஒட்டி இருக்கும் குடியிருப்புகளில் வசித்து வரும் பொதுமக்களை சந்தித்து விளையாட்டுத்தனமாக மண் கட்டி, களிமண், பாட்டில் போன்றவற்றை தண்டவாளத்தின் மீது வைக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ரயில் செல்லும் போது பெட்டிக்குள் கல் வீசுவது சட்டப்படி குற்றமாகும் என போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |