மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் ரவுடியான கிருபாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பிரேம்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கொன்னூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கிருபாநிதி மது குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனால் காவல் துறையினர் கிருபாநிதியை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.