Categories
உலக செய்திகள்

விபரீதமான விளையாட்டு….! “4000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங்”…. டிக் டாக் பிரபலம் பலி….!!!!

பாராசூட் திறக்க தாமதமானதால் நான்காயிரம் அடி உயரத்திலிருந்து குதித்த டிக் டாக் பிரபலம் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டின் ஒடரியோ மாகாணம் டொரண்டோ பகுதியை சேர்ந்த இளம் பெண் தன்யா பர்டசி.  இவர் 2017 ஆம் ஆண்டு மிஸ் டீன் கன்னடா அழகி போட்டியில் பங்கேற்று இறுதி சுற்று வரை சென்றார். டிக் டாக்கில் பிரபலமான இவருக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவ்ஸ் உள்ளனர். இவர் ஸ்கை டைவிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார். பலமுறை இரண்டு பேர் குதிக்கும் வகையில் உதவியாளருடன் வானில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசம் செய்துள்ளார். பின்னர் பயிற்சி பெற்று தனியாக ஸ்கை டைவிங் செய்ய உரிமம் வாங்கி இருந்தார்.

இந்நிலையில் தன்யா பர்டசி டொரன்டோவில் நேற்று தனியாக ஸ்கை டைவிங் செய்துள்ளார். விமானத்திலிருந்து 4000 அடி உயரத்தில் குதிக்கும் போது அவர் தாமதமாக பாராசூட்டை திறந்துள்ளார். பாராசூட் முழுமையாக திறந்து வேலை செய்வதற்குள் அவர் தரையில் வேகமாக விழுந்தார். இதையடுத்து தன்யாவை மீட்ட மீட்பு குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |