இந்துக்கள் புனிதமாக நினைக்கும் விபூதியை ஸ்டாலின் கீழே கொட்டியதால் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றிருந்தார். அங்கு அவருக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. தற்போது ஸ்டாலின் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேவர் ஜெயந்தியின் போது ஸ்டாலினுக்கு விபூதி வழங்கப்பட்டுள்ளது. அவர் அதனை நெற்றியில் பூசாமல் கழுத்தில் தடவி கொண்டு மீதம் இருந்த விபூதியை தரையில் கொட்டியுள்ளார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. விபூதியை அவமதித்த ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும் என இந்து மக்கள் சார்பாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை கரூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “அரசியல் செய்வதற்காக முகஸ்டாலின் தேவர் ஜெயந்திக்கு சென்றார். அவருக்கு அங்கு வழங்கப்பட்டது விபூதி. ஆனால் அதனை டால்கம் பவுடர் போன்று தரையில் கொட்டிவிட்டார். இது கண்டனத்திற்குரியது. இதற்கு நிச்சயம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.