பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியனுக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
தற்போது நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரம்யா பாண்டியன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் ரம்யா நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரம்யா கோவில் குளம் அருகே நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.