நடிகை சன்னி லியோன் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் அண்மையில் திரை பிரபலங்கள் மற்றும் விமர்சிப்பவர்கள் குறித்து பேசியிருக்கின்றார். இது பலரின் கவனத்தை அவர்பக்கம் திருப்பியுள்ளது. இணையத்தில் ட்ரோல் செய்பவர்கள், விமர்சிப்பவர்களை முதலில் பார்க்கக் கூடாது. நாம் அதை படிப்பதே அவர்களின் ஊக்கப்படுத்துவதாக அமையும்.
அவர்கள் நமது வாழ்க்கைக்கு அவ்வளவு முக்கியமானவர்கள் இல்லை. அவர்கள் நமக்கு சமைத்து கொடுப்பவர்களா? இல்லை நம் குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றி விடுபவர்களா? எதுவுமே கிடையாது. அதனால் அவர்களை அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள். கண்டுகொள்ளக் கூடாது. இது சக நடிகைகளை உற்சாகபடுத்துவதோடு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர் தற்போது வெப் தொடரில் நடித்து வருகின்றார் குறிப்பிடத்தக்கது.