Categories
தேசிய செய்திகள்

விமானங்களில் இனி இந்திய இசை…. விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடி….!!!!

இந்திய விமான நிறுவனங்கள் இயங்கும் விமானங்களில் இந்திய இசையை ஒலிக்க ஆவண செய்ய வேண்டும் என்று கடந்த 23ஆம் தேதி இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஆகிய இடங்களில் இந்திய இசையை ஒலிக்கச் செய்வது குறித்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் பரிசலீக்க அளிக்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில், “அமெரிக்க நிறுவனங்களின் விமானத்தில் அந்த நாட்டின் ஜாஸ் இசை ஒலிக்கப்படுகிறது. ஆஸ்திரியா விமானத்தில் மொஸார்ட் இசை ஒலிக்கப்படுகிறது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இயக்கும் விமானத்தில் மரபு இசை ஒலிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தனியார் மற்றும் அரசு இயக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் இரண்டிலும் எப்போதாவதுதான் இந்திய இசையை ஒழிக்கப்படுகிறது. இதனை மாற்றி இந்திய விமானங்களில் இந்திய இசை ஒழிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இந்திய இசைக்கு என்று ஆழமான பாரம்பரிய உள்ளது என்றும் நாம் ஒவ்வொருவரும் இந்திய இசை குறித்து பெருமை கொள்ள வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |