இந்திய விமான நிலையம் மற்றும் நிறுவனங்களுக்கு இந்திய இசை வாத்தியங்களை இசைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இசைவாத்தியங்களை இசைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக ஒரு சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அவை இந்திய இசைக்கருவிகளை இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா ? என்றும் மத்திய அரசின் திட்டத்தின்படி பொழுதுபோக்கிற்காக மேம்படுத்தப்பட்டுள்ளதா ? என்ற கேள்விகள் தான். இதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி கே சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
இந்திய விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் அதே சமயத்தில் இங்கு இசை வாத்தியங்களைக் இசைக்கலாம் என்ற முடிவை மட்டுமே விமான நிறுவனங்கள் கருத்தில் கொள்ளுமாறு விமான போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.