ஜெட் டிரக் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பேட்டீல் கிரேக் நகரில் விமான கண்காட்சி மற்றும் ராட்சத பலூன் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது 2 விமானங்கள் வானத்தில் பறந்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது அதற்கு ஈடாக 300 மைல் வேகத்தில் ஜெட் டிரக் ஒன்றும் கீழே சென்றது.
இந்த ஜெட் டிரக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடித்து எராந்தது. இந்த தீ விபத்தில் ஜெட் டிரக்கை ஓட்டிச் சென்ற வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தீ விபத்து காரணமாக கண்காட்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது