Categories
தேசிய செய்திகள்

விமானங்களை புதுப்பிக்க நடவடிக்கை… எப்படி தெரியுமா…? ஏர் இந்தியா அதிரடி முடிவு…!!!!!

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாட்டா நிறுவனம் வாங்கியதை தொடர்ந்து ஏர் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது இந்த விமானங்களை புதுப்பிக்க அதிலும் குறிப்பாக கேபின்களை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. 4,ooo மில்லியன் டாலர் செலவில் இந்த புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்கு ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும் இதற்காக லண்டனை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அனைத்து வகுப்புகளிலும் நவீன தலைமுறையை சார்ந்த இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் விதமாக கேபின் உள்புற வடிவமைப்பு முற்றிலும் மாற்றப்படுகிறது. இது குறித்து ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் கூறியதாவது, “விகான் ஏ.ஐ திட்டத்தின் கீழ் உலக தரம் வாய்ந்த விமான நிறுத்தத்திற்கு ஏற்ற தயாரிப்பு மற்றும் சேவையின் மிக உயர்ந்த தரத்தை அடைவதற்கு ஏர் இந்தியா உறுதி செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |