Categories
தேசிய செய்திகள்

விமானத்திற்குள் நுழைந்த புறாக்களால் பயணிகள் அதிர்ச்சி – மன்னிப்பு கேட்ட நிறுவனம்!

அகமதாபாத்தில் இருந்து ஜெய்பூர் செல்லும் ‘கோ ஏர்’ விமானம் புறப்படத் தயாரான போது திடீரென விமானத்தின் உள்ளே புறாக்கள் பறந்தது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அகமதாபாத்தில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில் இரண்டு புறாக்கள் புகுந்தது. பயணி ஒருவர் தன்னிடம் இருந்த பெட்டியை வைக்க தனது சீட் பகுதியின் மேலுள்ள அறையை திறந்தபோது அங்கு புறாக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதை விமானப் பணியாளர்களிடம் தெரிவிப்பதற்குள், அந்தப் புறாக்கள் வழி தேடி விமானத்தில் பறக்கத் தொடங்கியது. இதனை விமானத்தில் அமர்ந்திருந்த சக பயணிகள் விடியோ எடுத்தனர். பின்னர் விமான ஊழியர்கள் சத்தம் எழுப்பி புறாக்களை வெளியில் விரட்டியுள்ளனர்.

அதன் பின்னர் விமானம் புறப்பட்டுள்ளது. இதனால் விமானம் சுமார் அரை மணி நேர தாமதத்துக்குப் பின் புறப்பட்டது. விமானத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த திடீர் சம்பவத்திற்கு GoAir விமான நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும் விமான நிலையத்தில் பறவைகள் புகுவதை தடுக்கவும் வகை செய்ய வேண்டும் என கோரியுள்ளனர். இருப்பினும் விமானத்துக்குள் புறாக்கள் வந்த வழி மர்மமாகவே உள்ளது.

Categories

Tech |