சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 156 பயணிகளுடன் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, மனைவியுடன் பயணம் மேற்கொண்ட மலேசியா நாட்டைச் சேர்ந்த கோபாலன் அழகன் (52) என்பவர் தான் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்து விமானத்துக்குள்ளேயே புகைபிடிக்க தொடங்கி இருக்கிறார். இதற்கு சக பயணிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் விமானம் பணிப் பெண்களும் அவரிடம் விமான பாதுகாப்புசட்ட விதிகளின் அடிப்படையில் விமானத்திற்குள் புகைபிடிப்பது குற்றம் ஆகும்.
இதனால் புகைபிடிப்பதை நிறுத்தும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து இது தொடர்பாக விமான பணிப்பெண்கள், விமானியிடம் புகாா் தெரிவித்ததை அடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் விமானம் சென்னையில் தரை இறங்கியதும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், கோபாலன் அழகனை விமானத்திலிருந்து இறக்கி போலீசில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து சென்னை விமான நிலைய காவல்துறையினர் வழக்குபபதிவு செய்து கோபாலன் அழகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.