Categories
பல்சுவை

விமானத்திற்கு எதற்காக வெள்ளை பெயின்ட் அடிக்கிறாங்க தெரியுமா…? இது தான் காரணமாம்… படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!

விமானத்தின் நிறம் ஏன் வெள்ளையாக இருக்கிறது வேறு நிறத்தில் இல்லாததற்கு காரணம் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

விமானம் வெள்ளையாக இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் இருக்கிறது. வெள்ளை நிறம் வெப்பத்தை தடுக்கும். விமானம் ஓடுபாதையில் இருந்து வானம் வரை சூரியன் மட்டுமே இருப்பதால் சூரியனின் கதிர்கள் விமானத்தின் விழுந்துகொண்டே இருக்கும். சூரியனின் கதிர்கள் பயங்கர வெப்பத்தை உருவாக்கும். ஏனெனில் வெள்ளை நிறம் சிறந்த பிரதிபலிப்பான் என்று அழைக்கப்படும். இதனால் விமானங்கள் சூடாகாமல் இது தடுக்கிறது.

வெள்ளை நிறத்தின் மற்றொரு நன்மை என்ன என்றால் அதில் ஒரு கீறல் அல்லது விரிசல் ஏற்பட்டால் எளிதில் அடையாளம் காண முடியும். இதன் மூலம் விமானத்தை ஆய்வு செய்வது என்பது எளிதாகும். ஒவ்வொரு பருவத்திலும் வெள்ளை விமானம் தெரியும். இது விபத்தை குறைகிறது. இது தவிர மிகப்பெரிய மற்றும் முக்கியமான காரணம் வெள்ளை நிறத்தின் எடை மற்ற வண்ணங்களை விட குறைவாக இருக்கும். வேறு எந்த நிறமும் பயன்படுத்தாதற்கு இதுவே காரணம்.

இவை அனைத்தையும் தவிர வெள்ளை நிற விமானத்தை மறு விற்பனை செய்தால் நல்ல பணம் கிடைக்கும். விமானம் எப்போதும் வெயிலில் இருக்கும். வேறு எந்த நிறமும் அதில் அடிக்கப்பட்டிருந்தால் அது கலர் மங்கிவிடும். விரைவில் மீண்டும் பெயிண்ட் அடிக்க வேண்டிய நிலை உருவாகும். அதிக செலவுகள், அதிக எடை ஆகியவற்றை குறைப்பதால் விமானத்திற்கு வெள்ளை நிறம் அடிக்கப்படுகிறது.

Categories

Tech |