Categories
அரசியல் மாநில செய்திகள்

விமானத்திலேயே ஃபைல் பார்த்த முதல்வர்…. வைரல் photo…. இதுதான் காரணமோ….???

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள், திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு கோவை வந்தார். இன்று முதல் 3 நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், கயல்விழி செல்வராஜ், சு.முத்துசாமி, உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இந்நிலையில் 2021ல் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது அரசு கோப்புகளை பார்வையிட்டார். தற்போது அதேபோல், முதல்வர் ஸ்டாலின் நேற்று கோவைக்கு சென்றபோது விமானத்திலேயே அரசு கோப்புகளை பார்வையிட்ட போட்டோ வைரலாகிறது. பாஜகவை எதிர்ப்பதாக  சொல்லும் ஸ்டாலின், மோடியை பின்பற்றுவதாக பாஜகவினர் கூற, எங்கள் தலைவர் மக்களுக்காக ஓய்வு இல்லாமல் உழைக்கிறார் என திமுகவினர் பதிலடி கொடுகின்றனர். இந்த புகைப்படங்கள் சொல்லும் மறைமுக செய்தி 2024 மக்களவை தேர்தல் மோடி Vs ஸ்டாலின் என்பது தான்.

Categories

Tech |