தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், கடந்த 10-ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் “எமர்ஜென்சி” கதவை திறந்து விளையாடி இருக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
போட்டோஷாப் கட்சி என சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்படுவது பா.ஜ.க கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருப்பது பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை தான் என பலர் சமூகவலைதளங்களில் பலர் கூறிவருகின்றனர். அத்துடன் எமர்ஜென்சி கதவை யாரேனும் திறப்பார்களா எனவும் அவர்கள் கேலி செய்து வருகின்றனர்.