Categories
உலக செய்திகள்

தொழில்நுட்ப கோளாறால்…. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…. அவதியில் பயணிகள்….!!

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம்  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 125 பயணிகளுடன் இண்டிகோ 6இ-104 விமானம் சார்ஜாவில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட விமானம் நேற்று இரவு 11 மணி அளவில் ஷார்ஜாவில் இருந்து புறப்பட்டுள்ளது. நான்கு மணி நேர பயணத்தில் அந்த விமானம் ஐதராபாத் வந்தடைய வேண்டும். இந்த சூழ்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணம் காட்டி நள்ளிரவு 2.15 மணிக்கு கராச்சியில் தரையிறக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணத்தின் போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக விமானி தெரிவித்துள்ளார். விமானத்தை அவசரமாக தரையிறக்க கூறினார். இதனையடுத்து விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரை தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் மேற்கொண்ட அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். கராச்சியில் சிக்கியுள்ள பயணிகள் மாற்று விமான மூலமாக இந்தியா கொண்டுவரப்பட இருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு இந்திய விமான போக்குவரத்து ஆணையம்  உத்தரவிட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து மாற்று விமானம் ஒன்று கராச்சி விமான நிலையம் சென்றடைந்துள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அந்த விமானம் பயணிகளை ஏற்றுக்கொண்டு புறப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |