பாங்காக்கிலிருந்து இந்தியா வந்த 4 இந்திய பயணிகள் ஒன்று சேர்ந்து விமானத்திலிருந்த மற்றொரு இந்திய பயணியை தாக்கினர். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய மந்திரி ஜோதிராதித்யா வெளியிட்டுள்ள பதிவில் “தாய்ஸ்மைல் ஏர்வே விமானத்தில் பயணிகளுக்கு இடையில் நடைபெற்ற சண்டை பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி தாய்லாந்திலிருந்து கொல்கத்தா வந்த விமானம் புறப்படுவதற்கு முன் இந்த சண்டை நடந்ததாக தாய் ஸ்மைல் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது