நம்மில் பலருக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் அதிக செலவு ஆகும் என்பதால் அந்த ஆசையை அப்படியே விட்டுவிடுவோம். சிலர் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பதை கனவாக வைத்திருப்பார்கள். அருகிலுள்ள நகரங்களுக்கு செல்வதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டால் விமான பயணம் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி ஒரு சலுகை விஸ்தாரா விமான நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
அதனால் நீங்கள் விமானத்தில் செல்ல திட்டமிட்டு இருந்தால் உடனடியாக டிக்கெட்டை புக் செய்யுங்கள். விஸ்தாரா விமான நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் கோடைகால சிறப்பு சலுகையை தற்போது அறிவித்துள்ளது. இந்த சலுகை எகானமி, பிரீமியம் எகானமி மற்றும் வணிக வகுப்புகளுக்கு வழங்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தின் சலுகைநேற்று ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 21.59 மணி வரை மட்டுமே இருந்தது.
இந்த சலுகையில் எகானமி வகுப்பிற்கு ரூ.2,499, பிரீமியம் வகுப்பிற்கு ரூ.3,459 மற்றும் வணிக வகுப்பிற்கு 9,999 ரூபாய் அணா டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச விமான பயணிகளுக்கான முன்பதிவு காலம் ஏப்ரல் 25ஆம் தேதி வரை உள்ளது.சர்வதேச விமானங்களுக்கு எகானமி வகுப்பில் ரூ.12,999, பிரீமியம் எகானமி ரூ.17,249 மற்றும் வணிக வகுப்பிற்கு ரூ.35,549 என கட்டணம் உள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதி வரை இரவு 23.59 வரை முன்பதிவு செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான இந்த கட்டணம் ஒரு வழி கட்டணம் மட்டுமே. ரிட்டன் பயணத்துக்கு தனியாக கட்டணம் இருக்கும். டெல்லி, மும்பை மற்றும் உதய்பூரில் இருந்து டேராடூன், சண்டிகர், லக்னோ, அமிர்தசரஸ், லே, ஸ்ரீநகர், வாரணாசி, கோவா, கொச்சி, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களில் இச்சலுகை கிடைக்கும்.