டெல்லியிலிருந்து மும்பை இன்டிகோ விமானத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவதக் காரத் அதிகாலை விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணியளவில் விமான பணிப்பெண் அவசர மருத்துவ சிகிச்சைக்காக டாக்டர் தேவை என்று அறிவித்தார். இந்நிலையில் விமான பணிப் பெண்ணிடம் என்ன பிரச்சினை என்று பகவத் காரத் கேட்டார். அதற்கு அந்த பணி பெண் 45 வயதான நபர் மயக்கம் அடைந்துள்ளார் என்று அவர் கூறினார்.
அதன்பிறகு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க பகவத் காரத் சென்றார். பாதிக்கப்பட்ட நபரின் சட்டையை கழற்றி அவரது மார்பில் மசாஜ் செய்து அவரது இதயத்திற்கு ரத்தம் பாயும் வகையில் கால்களை சற்று உயர்த்தி தலையணையில் வைத்தார். அதன் பிறகு விரைவில் அந்த நபர் சுயநினைவை அடைந்து அவருக்கு குளுக்கோஸ் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி அவர் ‘இதயத்தில் எப்போதும் மருத்துவர்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.