ரூ.56 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 1091.560 கிராம் தங்க கட்டிகளை களிமண்ணில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய சுங்க இலகா நுண்ணறிவு பிரிவினர் வெளி நாட்டில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகளிடம தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
துபாயிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகள் இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு அலுவலர்கள் அந்த இருவரையும் தனியாக அழைத்து விசாரணை செய்தனர் அப்போது அவர்களை சோதனை செய்த போது 1091.560 கிராம் தங்க கட்டிகளை களிமண்ணில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
களிமண்ணில் மறைத்து கடத்த முயன்ற தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.56,58,647 ஆகும். இதனையடுத்து அவரிடமிருந்து தங்க கட்டிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர். மேலும் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தங்கம் கடத்தி வந்த இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.