டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்திற்கு விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு விமானத்தில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் விமான நிலையம் வந்து சேர்ந்தவுடன் வளாகத்தில் உள்ள மேதாந்தா மருத்துவ மையத்தில் தாய் மற்றும் குழந்தை இருவரும் அனுமதித்துள்ளனர். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் twitter பதிவில் பிறந்த குழந்தையின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதில் முதல் இளம் பயணியை வரவேற்கிறோம். மேதாந்தா மருத்துவ மையத்திற்கு முதல் குழந்தை வந்து சேர்ந்த நிகழ்ச்சியை நாங்கள் கொண்டாடுகிறோம் தாயும், சேயும் நலமுடன் இருக்கின்றனர் என பதிவிட்டுள்ளனர். மேலும் அவசரகால சிகிச்சைக்காக முனையம் 3-ல் அனைத்து நேரங்களிலும் நன்கு பயிற்சி பெற்ற டாக்டர்கள் பணியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து டெல்லி விமான நிலைய முனையங்களில் மேதாந்தா அவசர கால சிகிச்சை மையமும் அமைந்துள்ளது.