பாரிசில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து டெல்லிக்கு ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்டது. அப்போது விமானம் பாதி வழியிலேயே அவசரமாக பல்கேரியாவில் தரையிறக்கப்பட்டது. ஏன் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று விசாரித்த போது அதில் பயணித்த ஒரு பயணி அந்த விமானத்தில் உள்ள மற்ற பயணிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும், பைலட் இருக்கும் அறையின் கதவை திறக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரச்சனையை சமாளிக்க முடியாததால் அந்த விமானி விமானத்தை தரையிறக்கி உள்ளதாக முதல்கட்ட தகவலின் அடிப்படையில் தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியதில் சம்பவத்திற்கு காரணமான பயணி இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.