பயிற்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி உட்பட 2 விமானிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலமான நலகொண்டா மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் கால்வாயை ஒட்டிய பகுதியில் பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடட் என்ற பெயரிலான தனியார் விமான பயிற்சி நிலையம் இருக்கிறது. இந்நிலையில் இன்று (பிப்..26) மதியம் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானியான பெண் மகிமா மற்றும் விமானி ஒருவர் ஹெலிகாப்டரில் பயிற்சிக்காக சென்றனர். அப்போது அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் துங்கதுர்தி கிராமம் அருகே விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து எரிந்து சாம்பலானது.
இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இருவரும் எரிந்து கருகிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் விமான பயிற்சி நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாக பறந்த காரணத்தால் மின்சார கம்பத்தில் மோதி, கீழே விழுந்து நொறுங்கி பற்றி எரிந்ததாக தெரியவந்துள்ளது.