சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஏமன் ஹவுத்தி குழு தகவல் வெளியிட்டுள்ளது .
ஏமனின் ஹவுத்தி, சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாக எமனின் ஹவுத்தி குழு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. ஹவுத்தி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா ஷரியா, விமான நிலையத்தின் மீது இத்தாக்குதல் நடத்த 4 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறினார். ஏற்கனவே ஹவுதி போராளிகள் சவுதி அரேபியாவை தொடர்ந்து குறிவைத்து டெரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பல தாக்குதலை சவுதி முறியடித்ததாகவும் எனினும் விமான நிலையத்தை தாக்க ஏமன் எல்லையிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து தாக்கியதாக கூறப்படுகிறது .
https://twitter.com/breakingavnews/status/1359503835237134340?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1359503835237134340%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Fothercountries%2F03%2F239649
இதுதொடர்பாக செய்தியாளர் யஹ்யா ஷரியா கூறுகையில், ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படை நடத்தும் வான்வெளி மற்றும் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். இந்த தாக்குதலில் பயணிகள் விமானம் ஒன்று தீ பிடித்ததாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படை அறிக்கை வெளியிட்டுள்ள தகவலில் இந்த தாக்குதலால் பொதுமக்கள்,பயணிகள் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக கூறுகிறார்கள் .