தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக திருச்சி மாநகராட்சி காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்,திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் விமான நிலையம் வந்தனர். திருச்சியிலிருந்து காரில் தஞ்சாவூர் புறப்பட உள்ள ஆளுநர் ஆர். என் ரவி இன்று மாலை தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் சரஸ்வதி மஹால் போன்ற இடங்களுக்கு செல்கிறார். இதனைத் தொடர்ந்து நாளை காலை
கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல் ருக்மணி விஸ்வ வித்யாலயா பள்ளி வளாகத்தில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளும் ஆளுநர் திங்கட்கிழமை மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
Categories