தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த நபரிடம் இருந்து ஒரு கிலோ எடை கொண்ட 2 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 100 கிராம் எடை கொண்ட 2 தங்க தகடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவை இரண்டின் மதிப்பு 1.09 கோடி ஆகும். இதையடுத்து தங்க கடத்தலில் ஈடுபட்ட நபரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.