ஒமைக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. ஓமைக்ரான் பாதிப்பை எந்தெந்த நாடுகள் எவ்வாறு கையாளகின்றன என்பதை பொருத்து விமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து கனடாவிலுள்ள டொரண்டோ நகருக்கு இதுவரை இருந்த குறைந்தபட்ச கட்டணம் 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதனைப்போலவே டெல்லியில் இருந்து லண்டன் நகருக்கு இதுவரை 60 ஆயிரம் ரூபாயாக இருந்த பயண கட்டணம் இனி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனைப் போலவே பல்வேறு நகரங்களுக்கு விமான கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. எந்த நாடுகளில் இந்த புதிய வகை கொரோனா பரவ தொடங்குகிறது என்பதை பொறுத்து விமான கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.