நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால்ஒரு சில விமான சேவைகள் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் சென்னையிலிருந்து அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கான பயண கட்டணம் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னை – லண்டன் ஒரு வழி விமான கட்டணம்ரூ. 27,000லிருந்து ரூ.1.16 லட்சம், பாரிஸ் செல்ல ரூ.1.86 லட்சம், ஜெர்மனி செல்ல ரூ.1.80 லட்சம், பிராங்க்பர்ட் செல்ல ரூ.1.80 லட்சம் ஆம்ஸ்டர்டாம் செல்ல 1.61 லட்சம், நியூயார்க் செல்ல ரூ.1.3 லட்சம் செலுத்த வேண்டும். இது ஆகஸ்ட் முதல் வாரம் பயணம் செய்வதற்கான கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.