Categories
உலக செய்திகள்

விமான சேவைகளுக்கு… பிரிட்டன் விதித்த தடையால்… துபாய்க்கு இவ்வளவு இழப்பா…?

பிரிட்டன் தங்களின் விமான சேவைகளுக்கு தடை விதித்ததால் துபாய்க்கு 23 பவுண்டுகள் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

பிரிட்டன் மக்கள் சுற்றுலாவிற்காக துபாய்க்கு அதிகமாக செல்கிறார்களாம். துபாய்க்கு செல்லும் சுற்றுலா பயணிகளில் சுமார் 7 சதவீதம் பேர் பிரிட்டன் மக்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த வருடத்தில் கொரோனா உருவாவதற்கு முன்பே சுமார் ஒரு லட்சம் பிரிட்டன் மக்கள் மாதந்தோறும் துபாய்க்கு சென்றுள்ளார்கள்.

மேலும் இவர்களால் ஒவ்வொரு மாதமும் 34 மில்லியன் பவுண்டுகள் துபாய்க்கு வருமானம் கிடைத்துள்ளது. இதனிடையே துபாயின் வருவாய் கொரோனா பாதிப்பால் சரிவடைந்திருந்தது. ஆனால் தற்போது மாடல்கள், சமூக ஊடக பிரபலங்கள் போன்றவர்கள் பணி காரணமாக துபாயில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே துபாயில் ஓட்டலில் தங்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 71% ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகள் பல தங்களது எல்லைகளை மூடிவிட்டது. இந்நிலையில் துபாய் மட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக எல்லைகளை திறந்ததால் அங்கு கொரோனா பரவ தொடங்கிவிட்டது.

எனவே துபாயிலிருந்து வரும் மாடல்கள் மற்றும் பிரபலங்களினால் உருமாறிய கொரனோ வைரஸ் பிரிட்டனுக்குள் நுழைந்து விடக்கூடாது என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் விமானங்கள் பிரிட்டனிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தங்களின் விமான சேவைகளை தடை செய்ததால் துபாய்க்கு சுமார் 23 பில்லியன் பவுண்டுகள் வருவாய் இழக்க நேரிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |