Categories
தேசிய செய்திகள்

விமான சேவையை நிறுத்தும் திட்டம் இல்லை… விமானத்துறை அதிரடி..!!

தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் விமான சேவையை நிறுத்துவதற்கு வாய்ப்பில்லை என்று விமானத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் உள்நாட்டு விமான சேவைகளை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங்புரி தெரிவித்துள்ளார். சமயம் என்பது சதவீத விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் அனைத்து விமானங்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், பரவல் அதிகரித்ததன் காரணமாகவே 100% இயக்காமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |