Categories
தேசிய செய்திகள்

விமான டிக்கெட் அதிரடி உயர்வு…? பயணிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

விமானங்களில் டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர் பிரச்சினையை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோலிய பொருட்களின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. விமானகங்களில்  பயணம் செய்வோருக்கு தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிவாயு விலை தற்போது அதிரடியாக உயர்ந்து இருக்கிறது. இதன் விலை வரலாறு காணாத அளவில் 18 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டிருக்கிறது.

விலை உயர்வுக்கு  பின் டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை1,10,666.29 ஆக உயர்ந்திருக்கிறது. இது முந்தைய விலையைவிட ரூ.17,135.63 உயர்வாகும். விமான எரிபொருள் விலை 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளதால் விமான நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது பொதுமக்களையும்  வெகுவாக பாதிக்கும். ஏனெனில் விமான எரிபொருளின் விலை உயரும் போது அதன் தாக்கத்தை ஈடுகட்டுவதற்காக விமானப் பயணிகள் மீது சுமத்துவது வழக்கம் ஆகும்.

அதாவது டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்படும். இது விமான பயணிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா  பிரச்சினையால் நிதி நெருக்கடியில் தவித்து வந்த இந்தியர்களுக்கு விமான டிக்கெட் உயர்ந்தால் மேலும் நெருக்கடி ஏற்படும். இதன் காரணமாக விமான பயணங்களை தவிர்த்து பேருந்து ரயில் போன்றவற்றில் செல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. விமான நிறுவனங்களுக்கான செலவுகளில் சுமார் 40 சதவீத பங்களிப்பை விமான எரிபொருள் கொண்டிருக்கிறது.

அதனால் விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால் விமான நிறுவனங்களுக்கான செலவுகளும் மேலும் அதிகரிக்கலாம். கொரோனா  பிரச்சினையால் மனித விமான நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ள  உள்ள நிலையில் தற்போதைய விலை ஏற்றம் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

Categories

Tech |