Categories
உலக செய்திகள்

விமான தரையிறங்கிய போது…. நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலால்…. 5 பேருக்கு நேர்ந்த நிலை…!!

விமானம் தரையிறங்கிய போது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஏமன் நாட்டில் இருக்கும் ஏடன் என்ற விமான நிலையத்தில் பயங்கரமான வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசாங்கத்தின் அமைச்சர்கள் வந்த விமானம் ஏடனில்  தரையிறங்கியுள்ளது. அப்போது தரையிறங்கிய சிறிது நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதாவது அவர்கள் விமானத்தில் இருந்து இறங்கி கொண்டிருந்தபோது திடீரென்று வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக பிரதமர் அப்துல்மாலிக் ஏமனின் சவுதி தூதர் முகமது அல் ஜாபர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரையும் பத்திரமாக நகரின் ஜனாதிபதி மாளிகைக்கு மாற்றியுள்ளனர். மேலும் இந்த பயங்கர தாக்குதலுக்கு காரணம் தற்போது தெரியவில்லை என்று என்று கூறப்பட்டுள்ளது. எனினும் ஹவுத்தி ஏவுகணைகளைக்கொண்டு தான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |