Categories
மாநில செய்திகள்

விமான நிலையத்திற்குள் இறந்து கிடந்த நபர்…. பகீர் சம்பவம்….!!!!!!!!!

சென்னை விமான நிலையத்தில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய அத்தாரிட்டி கேன்டீன் இருக்கின்றது. அதன் அருகே நேற்று இரவு சுமார் 40 வயது ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை ஆய்வு செய்துள்ளனர்.

உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இதனையடுத்து  உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இறந்த நபர் யார்? எப்படி இறந்தார்? என்பது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் இவர் ரமேஷ் என்பதும் கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை விமான நிலையத்தில் பிரி பெய்ட் டாக்ஸிகளை சுத்தம் செய்வது டிராலிகளை தள்ளுவது போன்ற வேலைகளை செய்து வந்திருக்கின்றார்.

மேலும் இவர் குடி போதைக்கு அடிமையானவர் எனவும் தெரியவந்துள்ளது. எனவே இவர் அளவுக்கு அதிகமாக மது போதையில் உயிரிழந்துள்ளாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனையின் முடிவில் தான்  தெரியும் என கூறப்படுகிறது. விமான நிலையத்திற்குள்  மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |