தொடர் கனமழை காரணமாக பெங்களூரு விமான நிலையத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பெங்களூர் விமான நிலையத்தில், மழைநீர் சூழ்ந்துள்ளதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில பயணிகள் விமான நிலையத்திற்கு டிராக்டரில் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகாவின் கோனப்பன அக்ரஹார பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மின் கசிவு ஏற்பட்டதால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பெங்களூருவில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.