சென்னை விமான நிலையத்தில் அதிநவீன 6 மாடி மல்டி லெவல் கார் பார்க்கிங் டிசம்பர் 4ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகின்றது. சுமார் 250 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கார் பார்க்கிங்கில் 2,150 வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். இந்த புதிய கார் பார்க்கிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் அதில் இருக்கும் பல்வேறு நிர்வாக காரணங்களால் கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி முதல் கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. பழைய கட்டடம் 30 நிமிடங்களுக்கு 40 ரூபாய் வசூலித்த நிலையில் புதிய கட்டிடம் 75 ரூபாயாக உயர்ந்துள்ளது.