Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை….. அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்…. அதிகாரிகள் அளித்த தகவல்….!!!!

விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

லண்டனில் ஹீத்ரோ  விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று விமான நிலையத்தில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் வெடிகுண்டாக இருக்கலாம் என கூறி அச்சம் அடைந்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களை விமான நிலையத்திலிருந்து வெளியேற்றினர். பின்னர் அந்த பையை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் பையில் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் பொதுமக்களும், அதிகாரிகளும் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Categories

Tech |