Categories
சினிமா தமிழ் சினிமா

விமான நிலையத்தில் நடிகர் விக்ரமை பார்க்க குவிந்த ரசிகர்கள்…. அடித்து விரட்டிய பாதுகாப்பு படையினர்….!!!!!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக விக்ரம் மற்றும் கோப்ரா பட குழுவினர் உள்ளிட்ட 9 பேர் இன்று காலை 8:20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களை வரவேற்க ரசிகர்கள் ஏராளமானோர் விமான நிலையத்தில் திரண்டிருந்தார்கள்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விக்ரமை பார்த்து ரசிகர்கள் ஆர்வம் மிகுதியில் அவரை சூழ்ந்து கொண்டு ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் முந்தி எடுத்துக் கொண்டு அவருக்கு முன்பாக நின்று செல்பி எடுக்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு கருதி போலீஸ்காரரும் விக்ரமை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தனர். அப்போது அங்கிருந்து மதிய தொழில் பாதுகாப்பு படையினர் ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இந்த சூழலில் அவர்களை மீறி ரசிகர்கள் விக்ரமை நெருங்க முயற்சி செய்தபோது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரசிகர்களை அடித்து துரத்தியுள்ளனர். இதனால் விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது அதன் பின் விக்ரமை பாதுகாப்புடன் அழைத்து  சென்று காரில் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |