தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகராக திகழ்பவர் சித்தார்த். உதவி இயக்குனராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய சித்தார்த் பாய்ஸ் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல தரமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் CRPF வீரர்களின் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார். ஆங்கிலத்தில் பேச கூறியும் அவர்கள் தொடர்ந்து இந்தியிலே பேசி கடுமையாக நடந்து கொண்டதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே விமான நிலையங்களில் கனிமொழி உட்பட பல அரசியல் தலைவர்களை கூட இந்தியில் பேச அதிகாரிகள் நிர்பந்திப்பதாக புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.