சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 24-ஆம் தேதி முதல் ரேண்டம் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்.பி.சி.டி.ஆர் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் தட்பவெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் கொரானா தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 -ஆம் தேதியிலிருந்து இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த சுமார் 15,000 பயணிகளுக்கு தட்பவெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 400 பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் யாருக்கும் எந்தவிதமான அறிகுறியும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.