Categories
உலக செய்திகள்

விமான பணிப்பெண்ணுக்கு… சக ஊழியர்களால்… நேர்ந்த கொடூரம்…!!

விமான பணிப்பெண் ஒருவர் சக பணியாளர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிலிப்பைன்ஸ் நாட்டில் வசிக்கும் கிறிஸ்டின் ஏஞ்சலிக்கா டசெரா (23) என்ற பெண் பிலிப்பைன்ஸ் விமானத்தின் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன் சக ஊழியர்களுடன் புத்தாண்டு கொண்டாடுவதற்காக மக்காட்டி மணிலா என்ற நகரில் உள்ள சிட்டி கார்டன் என்ற நான்கு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது இரவு புத்தாண்டு கொண்டாடிய அவர்கள் மது அருந்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மறு நாள் காலை 10 மணியளவில் ஏஞ்சலிகாவின் சக ஆண் ஊழியரான Rommel Dalura Galida கண் விழித்து பார்த்த போது  ஏஞ்சலிகா குளியல் தொட்டியில் படுத்திருப்பதை பார்த்து உறங்கிக் கொண்டிருப்பதாக எண்ணி போர்வை போர்த்தி விட்டு சென்றுள்ளார்.

அதன்பின் சில மணி நேரங்கள் கழித்து அவரை எழுப்ப முயன்றுள்ளார். அப்போது அவர் பேச்சு மூச்சின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஏஞ்சலிக்காவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து பல மணி நேரங்கள் கடந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த ஏஞ்சலிக்காவின் உடல் முழுவதும் சேதம் அடைந்து காணப்பட்டுள்ளது. இதனால் அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட 11 பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் Rommel Dalura Galida(29), john bascul(27) மற்றும் John paul reyas Halil(25) ஆகிய 3 பேரை கற்பழித்து படுகொலை” செய்த வழக்கில் கைது செய்துள்ளனர். மேலும் மீதமிருக்கும் 9 பேரையும் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஏஞ்சலிகா உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் முடிவுகள் வருவதற்காக காத்திருப்பகாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் நடந்த அன்று ஏஞ்சலிகா மது அருந்தி இருந்தாரா? என்பதை கண்டறியும் சோதனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஏஞ்சலிகாவின் தாய் தன் மகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார். மேலும் “என் மகள் மற்ற விமான உதவியாளர்களுடன் தான் இருந்தார் என்பதால், அவருக்கு ஏதும் ஏற்படாது என்று நம்பி இருந்தேன் ஆனால், அவர்கள் ஏன் என் குழந்தையை இவ்வாறு செய்தார்கள்”. என் மகளுக்கு நீதி வேண்டும்  என்று கதறி அழுதுள்ளார்.

Categories

Tech |