பிற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஸ்வீடன் நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
உலக நாடுகள் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதாவது, பிற நாடுகளிருந்து வரும் விமானங்களை ரத்து செய்வது,சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பது, பொது இடங்களில் மக்கள் கூடுவது போன்றவை ஆகும். அந்தவகையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் விமான பயணிகளுக்கு ஸ்வீடன் நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் ஸ்வீடன் நாட்டு அரசு நடத்திய கூட்டத்தில் பிப்ரவரி 9-ஆம் தேதியிலிருந்து ஐரோப்பிய நாடுகளில்இருந்து வருகை தரும் விமான பயணிகளுக்கு தங்கள் நாட்டுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது அந்நாட்டில் கொரோனா தடுப்போசி செலுத்துதல் எண்ணிக்கை அதிகரித்ததால் எடுக்கப்பட்டுள்ளது.